
மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் திருவொற்றியூர், தாங்கல் நேற்று நடந்தது. கதிர்உசைன் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாநில மாணவர் அணி செயலர் ஜெயினுல் ஆப்தீன் பேசினார்.
கட்சியின் கொள்கைகளை விளக்கி தலைமை கழகப் பேச்சாளர் கோவை செய்யது பேசியதாவது:மனிதநேய மக்கள் கட்சி, ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் எடுத்து செல்லவே, தேர்தலில் களமிறங்கினோம். மக்கள், 69 ஆயிரம் ஓட்டுகளை அள்ளித் தந்தனர். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தான் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.மனிதகுலத்தின் எதிரிகள் நிறையவே உள்ளனர். பயங்கரவாதம் வளர்ந்துக் கொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. மாற்று அரசியலை உருவாக்கும் மகத்தான கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. நிச்சயம் அரசியல் மிகப் பெரிய மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கும். இவ்வாறு சையது பேசினார்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் உசைன்அலி, அப்துல்சமது, சலீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக