ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

ஞாயிறு, 9 மே, 2010

துடிப்பாய் களப் பணியாற்றியவர்கள், துடியாய் துடித்து உயிர் விட்டிருக்கிறார்கள். சாலையில் சிதறிய உடல்கள் ஒரே நிமிடத்தில் முடிந்துபோனது வாழ்க்கை! உருக்கமான பின்னணி தகவல்கள்


மே-5 அன்று சுட்டெரிக்கும் வெயிலில் த.மு.மு.க தலைமையகத்திலிருந்து நீதிமன்றம் நோக்கி பேரணி முன்னேறிக் கொண்டிருந்தது. அப்போது சுமார் 11.30 மணியளவில் ஊட்டியிலிருந்து வந்த செய்தி எல்லோரையும் நிலைகுலைய வைத்தது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிப் பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த அதி கொடூர விபத்தில் ஊட்டியைச் சேர்ந்த 6 ம.ம.கவினர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிர் துறந்தார்கள் என்ற செய்தி அனைவரையும் உலுக்கியது.
சென்னையில் பேரணிக்கு வந்தவர்கள் கைதாகிக் கொண்டிருக்கும்போது, அவர் களுக்கு இச்செய்தி பரவியதால் பலர் களத்திலேயே கண் கலங்கி, யாராவது உயிர் பிழைப்பார்களா? என பிரார்த்திக் கொண்டே இருந்தனர்.
மமக&வின் நீலகிரி மாவட்டச் செயலாளர், ஆற்றல் மிகு செயல்வீரர் ஷேக் அப்துல்லாஹ் (42), அதிர்ந்து கூட பேசத் தெரியாத ஊட்டி நகர செயலாளர் செய்யது சாதிக் (37) உறுப்பினர்கள் யூனூஸ் (எ) அப்துல்கனி (42) யாசர் (22) மதீன் (32) சைபுதீன் (36), ஆகியோரின் பெயர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தோர் பட்டியலில் வர, சற்று நேரத்தில் ஊடகங்களில் இது முதன்மை செய்தியானது.


கோடை வாசஸ்தலமான ஊட்டி சோகத்தில் மூழ்கியது. அந்த குடும்பங்கள் எல்லாம் மீளாத் துயரில் துடிக்க, ஆங்காங்கே வியாபாரிகள் கடைகளை மூடி விட்டு கட்சி அலுவலகத்திற்கும் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் படையெடுத்தனர்.

களத்தில் ஆலோசனை

சென்னை பேரணியின் முடிவில் பல நிர்வாகிகள், கைதாகி சென்று விட்டதால் களத்தில் இருந்த ஜே.எஸ்.ரிபாயி, மமக நிர்வாகிகள் ஹாரூன் ரஷீத், தமிமுன் அன்சாரி ஆகியோர் அடுத்தக் கட்ட ஆலோசனை செய்தனர். த.மு.மு.க மாநிலச் செயலாளர் கோவை.உமர் தலைமையில் ஒரு குழு கரூர் சென்று உடல்களை பெற்றுக் கொள்வது என்றும், மமக துணைப் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உடன் விமானம் மூலம் கோவை சென்று இன்னொரு குழுவுடன் ஊட்டிக்குச் சென்று மற்ற வேலைகளைப் பார்ப்பது என்றும் முடிவானது.

விபத்துச்செய்தி தமிழகம் முழுக்க பரவியதால், சமுதாய மக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தலைமை நிர்வாகிகளை தொடர்புக்கொண்ட படியே இருந்தனர்.


கோவை.உமர் தலைமையில் த.மு.மு.க துணைசெயலாளர் சாதிக், கோவை மாவட்ட த.மு.மு.க, ம.ம.க. நிர்வாகிகள் விரைந்து கரூர் நோக்கி சென்றுக் கொண்டிருக்க, கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று தகவல்களை தந்துக் கொண்டிருந்தனர்.விபத்து நடந்தது எப்படி?


காலை 10.40 மணியளவில் இவர்களின் கார் கரூர் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருக்க, எதிரே வந்த ஜல்லி லாரியின் அச்சு முறிந்ததால் அந்த லாரி வந்த வேகத்தில் கட்டுப்பாடு இழந்து, கார் மீது மோதியிருக்கிறது.
மிருகம் ஒன்று பாய்ந்து, பாய்ந்து குதறுவது போல், அந்த 10 சக்கரம் லாரி, மோதிய வேகத்தில் தீய்த்துக் கொண்டே இழுத்துச் சென்று சுவரில் மோத... ஒரே நிமிடத்தில் அலறல் சப்தத்துடன் எல்லாம் முடிந்துப் போயிருக்கிறது.துடிப்பாய் களப் பணியாற்றிய வர்கள், துடியாய் துடித்து உயிர் விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் அலறல் இச்சம்பவத்தை பார்த்த அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இன்னும் கொஞ்சம் நகர்ந்திருந்தால் 30 அடி ஆழக்கிணற்றுக்குள் கார் விழுந்திருக்கும். இந்த உடல்களும் கூட மேலும் குதறப்பட்டிருக்கும்.

உடல்கள் மீட்பு


ஓடிப்போய் உதவ முயன்றவர்கள், உடல்கள் சிதறிக்கிடந்ததைப் பார்த்து இயலாமையால் தவிக்க, செய்தியறிந்து சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவலர்கள் விரைந்து வந்தனர்.அதற்குள் லாரி ஓட்டுனரும், கிளீனரும் தப்பி காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.
காவலர்கள் அகற்ற முடியாத அளவுக்கு உடல்கள் நசிந்ததால், தீயணைப்பு படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் காரின் பாகங்களை வெட்டி, உடைத்து ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு உடலையும் மீட்டெடுத்துள்ளனர். போராடியே பழகிய சகோதரர்களின் உடல்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டது. பலரின் உடல்களில் சில பாகங்களே இல்லை!! யார்... யாருக்கோ ரத்தம் கொடுத்து உதவியர்களின் ரத்தம் லிட்டர், லிட்டராய் கொட்டி உறைந்துக் கிடந்தது.பிறர் நலனுக்காகவே ஓடி, ஓடி உழைத்தவர்களின் உடல்கள் உருக்குலைந்த நிலையில் வரிசையாய் கிடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் வந்ததும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது-கூடியிருந்த பொதுமக்கள் பலர் இதைப் பார்த்து உருகியிருக் கிறார்கள். செய்தியறிந்து அ.தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பகலவன் மற்றும் டி.என்.டி.ஜே. அமைப்பை சேர்தவர்களும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். சேலம், திருச்சி, திருப்பூர், ஈரோடு மாவட்ட த.மு.மு.க, மமக&வினரும் அங்கே குழும, மருத்துவமனையே அனுதாப அலைகளால் சூழப்பட்டது.


ஊட்டியை நோக்கி இறுதி பயணம்

ஒவ்வொருவரின் உடல்களுக்கும் பிரேத பரிசோதனைகள் நடக்க; கோவை.உமர் தலைமையிலான குழுவிடம் மாலை 7 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களை சேர்ந்த த.மு.மு.க வின் 6 ஆம்புலன்ஸ்களில் உடல்கள் ஏற்றப்பட்டு ஊட்டி நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.அதற்குள் ம.ம.க துணைப்பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தலைமையிலான குழுவினர் ஊட்டியில் ஒவ்வொருவர். வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறிவிட்டு ஜனாஸா அடக்கம் குறித்தும் அவர்களோடு விவாதித்தனர்.வழியெங்கும் சோகம்
ஆறு ஆம்புலன்ஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக அலறியப்படியே வந்துக் கொண்டிருக்க... விபத்து செய்தி ஏற்கனவே பரவியிருந்ததால் வழியெங்கும் பொதுமக்கள், கடந்து போன வாகனங்களை வேதனையோடு பார்த்திருக்கிறார்கள்.


திருப்பூர் வந்ததும் தேனீருக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வண்டியை நிறுத்த வேண்டி வந்த போது, அங்கு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட, இச்செய்தியறிந்த திருப்பூர் மக்கள் சாரை, சாரையாக ஓடி வந்து ஆம்புலன்ஸ்களை


வண்டியிலிருந்தவாரே ஜனாஸாக்களை பார்த்து உருகி யிருக்கிறார்கள். இதே போன்று அவினாசியிலும் மக்கள் கூட்டம் கூடி; தடுத்து, ஜனாஸாக்களை பார்வையிட்ட பிறகு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் 6 ஆம்புலன்ஸ்களும் ஊட்டியின் மலைத் தொடர்களில் சீறியபடியே ஏறி வர, அந்த இரவும்; அமைதியான சூழலும் துக்கத்தை இரட்டிப் பாக்கி விட்டது. இரவு 1.30 மணியளவில் ஊட்டி பெரிய பள்ளிவாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வரவும், அந்த குளிரிலும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஜனாஸாக்களை வண்டியிலிருந்தவாரே பார்த்தனர். எல்லா உடல்களும் உருக்குலைத்து இருந்ததால், ஒவ்வொரு ஜனாஸா வும் யாருடையது என தெரியாமல் மக்கள் பரிதவித்து மேலும், மேலும், சோகமாக இருந்தது. 10 நிமிடங்களில் அவரவர் இல்லங்களுக்கு ஜனாஸாக்கள் எடுத்து செல்லப்பட்டது,

அலைமோதிய கூட்டம்

அவர்களது வீடுகளில் இருந்த ஜனாஸாக்களை அடுத்த நாள் (மே-6 அன்று) காலை 8.30 மணியளவில் ஒவ்வொன்றாக எடுத்து வரப்பட்டு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.


ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட நீலகிரியின் மலைவாழ் கிராமங்களிருந்தும் மக்கள் கூட்டம், கூட்டமாய் வந்தனர். சுற்றுலா வந்திருந்த முஸ்லிம்களும், த.மு.மு.க, ம.ம.க&வை சேர்ந்தவர்களும் செய்தியறிந்து ஜனாஸாக்களை பார்க்க வந்திருந்தனர். கூட்டம் கூடிக் கொண்டே போக, அந்த முக்கிய சாலையை அதிகாரிகள் மூடி போக்குவரத்தை நிறுத்தினர். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் சாரை, சாரையாக கண்ணீர் மல்க பார்வையிட்டுக் கொண்டேபோக 10 மணிக்கெல்லாம், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிவிட நிலைமை கட்டுக் கடங்காமல் போனது.


கூட்ட நெரிசலில் ஒரு பெண் மூச்சுதிணறி விழுந்ததால் இனியும், ஜனாஸாக்களை பார்வையிட அனுமதிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஜனாஸாக்களை சுற்றிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அரணாக சுற்றி நின்று மக்களை ஒழுங்குப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.


10 மணியானாதும் தொழுகைக்கு எல்லோரும் தயாரானார்கள் சமுதாய மக்கள் ‘ஒழு’ செய்வதற்காக தங்கள் வீடுகளிலிருந்து தண்ணீர் கொடுத்து உதவி தங்கள் ஆறுதலை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதில் ஏராளமான பிற சமுதாய மக்களும் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுத்து உதவி செய்தார்கள்.


பள்ளிவாசலும் நிரம்பி, அந்த குறுக்கு தெருவும் நிரம்பி, வெளியே பல ஆயிரம் மக்கள் தொழுகைக்கு தயாரானதால் சாலை மறிக்கப்பட்டு தொழுகை நடந்தது. ஆங்காங்கே சுவர்கள், வீடுகளில் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக சோகத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
கண்ணீரும் வற்றிப்போனதே...

தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் தனித்தனியாக உடல்கள் ஏற்றப்பட்டு கபரஸ்தான் நோக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இறுதிஊர்வலம் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்தனர்.
வழி எங்கிலும் பொதுமக்கள் இரங்களுடன் நின்று கொண்டிருக்க குண்டூசி விழும் சப்தம் கேட்கும் அமைதியுடன் அன்பு சகோதரர்களின் ஜனாஸாக்கள் சென்றது.

ஊட்டி படகு ஏரிக்கு அருகில் 12.30 மணியளவில் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டன. கனத்த இதயங்களுடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அந்த சகோதரர்களை மனதில் சுமந்தவாரே பிரிந்து செல்ல தொடங்கினர்.
சமுதாயத்திற்கு உணர்வுகளை ஊட்டி வந்தவர்களை இழந்து ஊட்டி தவிக்கிறது. ஆற்றல்மிகு நிர்வாகிகளையும், ஊழியர்களையும் இழந்து ம.ம.க துடிக்கிறது. இறைவன் மிகப்பெரியவன். அவனே ஆறுதல் தரும் ஆற்றல் கொண்டவன்.