ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

சனி, 31 அக்டோபர், 2009

கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது



கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





அணுமின் நிலைய வளாகத்தின் முக்கிய வாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது.



இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.




தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ம.ம.க பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மதிமுக தலைமைக் கழக பிரதிநிதி வந்திய வேந்தன், டாக்டர். புகழேந்தி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



வியாழன், 29 அக்டோபர், 2009

தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை: அதிமுக தீர்மானம்


தேர்தல்களில், மின்னணு இயந்திர வாக்கு முறையை மாற்றிவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், கட்சித்தலைவர் மதுசூதனன் தலைமையில், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
முதலில் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் 190 பேர் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டார்கள்.
பின்னர் பொதுக்குழு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியதும் எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளர் டி.ஜெயக்குமார் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை வரவேற்று பேசினார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* இந்தியாவில் யாருமே நிகழ்த்தி இராத அளவுக்கு, இந்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஏதுவாக, உடனடியாக மத்திய தொலைதொடர்பு மந்திரி ராசாவை, பிரதமர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.
* மணல் கொள்ளை காரணமாக, தமிழகத்தின் நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பாலாறு, காவிரி, தாமிரபரணி, வைகை மற்றும் இதர ஆற்றுப் படுகைகளிலிருந்து தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளிலும், கப்பல்களிலும் பகிரங்கமாக மணல் கடத்தப்படுவதன் காரணமாக அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணை, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப் பஞ்சம் என்னும் அபாயத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது.
* இந்தியாவின் அண்டை நாடான சீனா, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நிலையை சமாளிக்க தேசப்பற்றும், துணிவும் உள்ள தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவை.
இந்தியாவின் நலன் பறிபோகாமல் இருக்கத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், இந்திய நிலப்பகுதிகளை கபளீகரம் செய்ய துடிக்கும் சீனாவிடம் இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
* நாடாளுமன்ற தேர்தலையடுத்து பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி நடத்த முடியும் என்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளன.
மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடியோ மாற்றமோ செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துவிட்டால், மோசடி நடந்திருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்போ அல்லது நீதிமன்றத்தின் முன்போ நிரூபிக்க எந்தவித வழிவகையும் இல்லை. மோசடி நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதும் இயலாத காரியம். நம் நாட்டில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள், வாக்கு பதிவானதற்கு இணையான அச்சு வெளியீட்டை (ஹார்டு காப்பி) உருவாக்குவது இல்லை. வாக்களிக்கும் சமயத்தில், மின்னணு வாக்கு எந்திரத்தில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கக் கூடிய அளவுக்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்காத வரையில், மோசடி குறித்த புகார்களின் உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க முடியாது.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்காளரும், தான் அளித்த வாக்கு அந்த வேட்பாளருக்கு அல்லது அந்தக் கட்சிக்குத் தான் சென்றடைகின்றதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலை இல்லாத பட்சத்தில், ஜனநாயக முறைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கும்.
உண்மையான ஜனநாயகம் மீண்டும் மலர, மின்னணு வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்த பொதுக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.
* 2009 பாராளுமன்ற தேர்தலின் போது முறைகேடாக நீக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று தீவிர மறுஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உரிய காலஅவகாசத்தோடு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

திங்கள், 26 அக்டோபர், 2009

வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி தீ விபத்தில் பாதிக்கப்படோருக்கு உதவிகள்


வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி 3வது வட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினருக்கு ரூ.27,000 மதிப்பிலான உதவிகள் வழங்கப் பட்டன. இதனை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வழங்கினார்.

சனி, 24 அக்டோபர், 2009

ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார்.


நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அறிவரங்கத்தில் அவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி மௌலவி ஹிதாயத்துல்லாஹ் நூரி அவர்களும், அரசியல் வாழ்க்கைளைப் பற்றி யாசின் நூருல்லாஹ் அவர்களும், இறையச்சம் பற்றி அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுதாயப் பணி பற்றி அப்துல் ஹாதி அவர்களும், குண நலன்கள் பற்றி ஹுசைன் பாஷா அவர்களும், கொடைத்தன்மை பற்றி நாசர் அலிகான் அவர்களும் எடுத்துரைத்தனர்;. அமீரக முமுக பொருளாளர் பொறியாளர் ஜெய்லானி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் போற்றும் மாமனிதரின் வாழ்வியல் நெறியை பல்வேறு கோணங்களில் தெரிந்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!


வெள்ளி, 23 அக்டோபர், 2009

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி.


மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் மாலேகான் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள்.
காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.
மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது.

வியாழன், 22 அக்டோபர், 2009

காங்கிரஸ் அமோக வெற்றி!!


நடைபெற்று முடிந்த மூண்று மாநில சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருக்கிறது.
மகராஷ்ட்ரா, ஹரியாணா, அருணாசலப்பிரதேஷ் ஆகிய மூண்று
மாநிலங்களிலும் காங்கிரஸிற்கே மக்கள் வாக்களித்து வெற்றி பெற
வைத்திருக்கின்றனர்.

புதன், 21 அக்டோபர், 2009

வாலிகண்டபுரம்: அடக்கஸ்தலத்தில் புதைக்க உரிமை மறுப்பு!தமுமுக முயற்சியால் முறியடிப்பு!!

பெரம்பலூருக்கு அருகே சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம் கிராமம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் 2 பள்ளிவாசல்கள் உள்ளன. மேலும் 2 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவுடைய முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்றும் உள்ளது. ஆனால் முஸ்லிம்களின் கபரஸ்தான் நிலத்தை ஆக்கிரமித்த சிலர் கபரஸ்தான் நிலத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

1981ல் முன்சீப் கோர்ட், 1987 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1991ல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும், 'நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம்' என தீர்ப்பளித்தன. எனினும் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து வந்தனர்.இந்நிலையில் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்து கபரஸ்தானில் அடக்கம் செய்ய அனுமதி கோரினர். உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. எனினும் 2 முறை ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முயன்றபோதும் ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் ஆக்கிரமிப்பாளர்கள்.அதிகாரிகளும் 'பீஸ் மீட்டிங்' என்ற பெயரில் முஸ்லிம்களின் உரிமையைத் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11.10.09 அன்று இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய சென்றபோது ஆக்கிரமிப்பு சக்திகளின் அடிவருடிகளான ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து முஸ்லிம்களை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் ஜமாத்தினர் தமுமுக மாவட்டத்தலைவர் மீரான் மைதீனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தமுமுக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். எனினும் வெளியூர்காரர்கள் என்று தமுமுக நிர்வாகிகளுக்கு பீஸ் மீட்டிங்கில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இந்த ஒரு தடவை இங்கு அடக்கம் செய்யாதீர்கள், அடுத்த தடவை நாங்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சமரசம் பேசினர் அதிகாரிகள். எனினும் தமுமுகவினர் உஷார்படுத்தியதால் ஜமாத்தினர் இந்த சூழ்ச்சிக்கு அடிபணியவில்லை.மாவட்ட நிர்வாகிகள் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பொதுச் செயலாளர், தொலைபேசி மூலம் ஆர்.டி.ஓ.விடம் பேசினார். எனினும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவுவதிலேயே உறுதியாக நின்றனர் அதிகாரிகள். இதையடுத்து பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து தமுமுகவினர் குவிய ஆரம்பித்தனர்.

இப்பிரச்சினைக்கு இறுதி முடிவைக் காணவும், முஸ்லிம்களின் உரிமையினை மீட்டெடுக்கவும் தமுமுக தலைமை முடிவெடுத்தது. திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட தமுமுகவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் பெரம்பலூர் நோக்கி கிளம்ப ஆயத்தமாயினர். பொதுச் செயலாளரும் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறேன் என்று சென்னையிலிருந்து புறப்பட, செய்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. அவர் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. இல்லாததால், அரியலூர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹுதாவை, பிரச்சினையை சமாளிக்கக் கோரினார். போலீஸ் படையும் குவிக்கப்பட்டது.

தமுமுக மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், மாவட்டச் செயலாளர் தாஹிர் பாஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் சுல்தான் மைதீன் தலைமையில் தமுமுக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். பல்வேறு சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். எனினும் முஸ்லிம் தரப்பு ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தின் ஆணையையும் பார்த்த எஸ்.பி. நஜ்முல் ஹுதா, முஸ்லிம்கள் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். இதனால் ஜனாஸா, முஸ்லிம்களின் கபரஸ்தானிலேயே அடக்கம் செய்யப்பட்டது.


முஸ்லிம்களின் ஒற்றுமையையும், தமுமுகவினரின் போராட்டக் குணத்தை யும் பார்த்த அதிகாரிகளும், ஆக்கிரமிப்பு சக்திகளும் திகைத்து நின்றனர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்த மகிழ்ச்சியில் ஜமாத்தினர் தமுமுகவினருக்கும், தமுமுக தலைமைக்கும் நன்றி கூறினர்.

மேலும் எதிர்வர இருக்கும் மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போதும், பிரச்சினைகளின் போதும் அனைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இறைவனின் உதவியால்மனிதநேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை நகரத்திற்கு ஒரு வலைதளம்