நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அறிவரங்கத்தில் அவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி மௌலவி ஹிதாயத்துல்லாஹ் நூரி அவர்களும், அரசியல் வாழ்க்கைளைப் பற்றி யாசின் நூருல்லாஹ் அவர்களும், இறையச்சம் பற்றி அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுதாயப் பணி பற்றி அப்துல் ஹாதி அவர்களும், குண நலன்கள் பற்றி ஹுசைன் பாஷா அவர்களும், கொடைத்தன்மை பற்றி நாசர் அலிகான் அவர்களும் எடுத்துரைத்தனர்;. அமீரக முமுக பொருளாளர் பொறியாளர் ஜெய்லானி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் போற்றும் மாமனிதரின் வாழ்வியல் நெறியை பல்வேறு கோணங்களில் தெரிந்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக