ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

சனி, 7 நவம்பர், 2009

கொட்டும் மழையில் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்;பிலும் 10 சதவீதம் தனிஇடஓதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியும், கச்சத்தீவை மீட்டு தர கோரியும் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் மண்டபத்தில் 6-11-2009 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றதுஇக்கண்டன ஆர்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் அவர்கள் தலைமை ஏற்றார். மனிதநேய மாநில துனைபொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள். த.மு.மு.க மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தஸ்பிக்அலி, பொருளாலர் சித்திக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கொட்டும் மழையையும் பொறுப்படுத்தாமல் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக