ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

புதன், 4 நவம்பர், 2009


பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு - ப. சிதம்பரம்


பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு என்றும் இது திட்டமிட்டே செய்த சதி என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சிறுபாண்மை மக்களை பாதுகாப்பது பெரும்பாண்மை மக்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
உத்திரப் பிரதேச மாநிலம் தியோபந்த் என்ற இடத்தில் ஜமாத்தே உலமா இ இந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் 30 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம், பாப்ரி மசூதி இடிப்பு மத அடிப்படைவாதத்தின் விளைவு என்று திட்டமிட்டே செய்யப்பட்ட சதி என்றும் கூறினார்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறையை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். சமூக அமைதியைக் கெடுக்கும் அனைத்து முயற்சிகளும் கண்டிக்கப்பட வேண்டியவையே. சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டுபவர்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு எதிராக வெளியிட்ட பத்வாவைப் பாராட்டிய சிதம்பரம், அந்த பத்வாவை முஸ்லிம்கள் மட்டுமல்லாது சரியான சிந்தனையில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக