ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

புதுவையில் அரசு பொது மருத்துவமனையின் அவலநிலையைக் கண்டித்து ம.ம.க ஆர்ப்பாட்டம்



காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை. பல்வேறு துறைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் கிடையாது. ஊழியர்களும் மருந்துகளும் கிடையாது. ஸ்கேன் எக்ஸ்ரே போன்ற நிரந்தர தொழில் நுட்ப வல்லுநர்கள் கிடையாது. விபத்து போன்ற அவசர சிகிக்சைக்கு தஞ்சாவூர் செல்ல வேண்டிய அவலநிலை. இத்தகைய அவலங்களை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நகர செயலாளர் அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது. ம.ம.க மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜா முகையதீன், அம்புரோஸ் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ம.ம.க மாவட்டச் செயலாளர் ­யாக்கத் அலி­, தமுமுக மா.செயலாளர் அப்துல் ரஹீம், தமுமுக மா.பொருளாளர் ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதிய அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக